அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 550 இன்ஜினியரிங் கல்லுாரிகள், அகில இந்திய கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று இயங்குகின்றன. இதில், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற, 13 கல்லுாரிகள் தவிர மற்ற கல்லுாரிகள், அண்ணா பல்கலை பாடத் திட்டம் மற்றும் தேர்வு முறையை பின்பற்றுகின்றன.இந்நிலையில், பி.இ., - பி.டெக்., மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்ற போதிலும், வேலை இல்லாமல் கஷ்டப்படுவது குறித்து, பல்கலை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதையடுத்து, தேர்வு மதிப்பீட்டு முறையில் படிப்படியாக மாற்றம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி, 2013ம் ஆண்டு பாடத்திட்டத்தை பின்பற்றும் பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், 170 பாடங்களுக்கான வினாத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே, தலா இரண்டு மதிப்பெண்ணில், 20 வினாக்களும், தலா, 16 மதிப்பெண்ணில், ஐந்து கேள்விகளும் இடம்பெற்றன. புதிய மாற்றத்தின்படி, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, தலா இரண்டு மதிப்பெண்ணில், 10 வினாக்கள் கட்டாயம். இரண்டில் ஒன்றுக்கு கட்டாய பதில் எழுதும் முறையில், தலா, 13 மதிப்பெண்ணுக்கு, ஐந்து வினாக்கள் ...